செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (10:39 IST)

'பரியேறும் பெருமாள்' படத்தை பாராட்டிய 'சாய்ரட் ' பட இயக்குனர்

`சாய்ரட்படத்தை இயக்கிய நாக்ராஜ் மஞ்சுளே, பரியேறும் பெருமாள் படத்தைப் பாராட்டியுள்*ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கி உள்ள  படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஜோடியாக  நடித்துள்ளார்கள்.

கடந்த மாதம் 28-ம் தேதி வெளியான இந்த படம் திரைத்துறை பிரபலங்களின் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் மராத்தியில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக `சாய்ரட்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய  நாக்ராஜ் மஞ்சுளே பரியேறும் பெருமாள் படத்தை வெகுவாக புகழ்ந்து பாராடியுள்ளார்.

இது குறித்து அவர்  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  “பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்தேன்.அருமையான படம். சினிமாவின் வடிவம் மற்றும் பொழுதுபோக்கில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் உண்மையைக் காட்சிப்படுத்தியுள்ளனர். சாதிய உணர்வுள்ளவர்களின் கன்னத்தில் அறைந்தது போல் இந்தப் படம் உள்ளது” என்று
கூறியுள்ளார்.