வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:22 IST)

3 மாதம் ஹாலிவுட் டூர்… கிளம்பிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். முதல் கட்டமாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக தான் நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். அதை முடித்துவிட்டு மீண்டும் மே மாதம்தான் கார்த்திக் நரேன் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளாராம்.