வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (20:19 IST)

தனுஷின் ‘D43' : மாளவிகா மோகனுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

தனுஷின் ‘D43' : மாளவிகா மோகனுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!
தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் ‘D43' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது
 
இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக இந்த படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
மேலும் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் இருக்கும் காட்சிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை  பார்க்கும் ரசிகர்கள் இதனை பாராட்டி கமெண்டை பதிவு செய்துவருகின்றனர்
 
சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது