சிம்புவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு.. அவரே வெளியிட்ட தகவல்..!
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு பிப்ரவரி 3ஆம் தேதி, அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் "தக்ஃலைப்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படத்தில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், சற்றுமுன் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் அன்றைய தினம் புதிய பட அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்த போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகுமா அல்லது வேறு இயக்குனர் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Edited by Mahendran