தியேட்டர் ரிலீஸுக்காக வரிசைகட்டும் படங்கள்!!
அடுத்த 3 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய மாஸ் நடிகர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியாகும் படங்களை விட வசூலில் முன்னிலையில் இருக்கும். மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலேயே வெளியாகி இருக்கும்.
இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த பண்டிகை நாட்களுக்கு படங்கள் வரிசைக்கட்டி உள்ளன. ஆம், அடுத்த 3 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்', சமுத்திரக்கனி நடித்துள்ள 'ஏலே', 'குட்டி ஸ்டோரி - பிப்ரவரி 12
ஓடிடியில் வெளியிட திட்டமிட்ட 'சக்ரா' - பிப்ரவரி 19
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் - மார்ச் 26
கார்த்தியின் 'சுல்தான்' - ஏப்ரல் 2
தனுஷின் கர்ணன் - ஏப்ரல் 9
விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' - ஏப்ரல் 14