திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (10:56 IST)

ஜகமே தந்திரம் OTT ரிலீஸ் - தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை OTT தளத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

 
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஓடிடி ரிலீசுக்கு தனுஷ் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருவதாக கூறப்பட்டது. 
 
இருப்பினும் இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் பேச்சு வார்த்தையை முடித்து விட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுவதால் தனுஷின் எதிர்ப்பையும் மீறி தயாரிப்பாளர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை OTT தளத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னையின் சில பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில், 
 
ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.