இட்லி கடை படத்தின் காட்சிகளைப் பார்த்து ஹேப்பியான ஜி வி பிரகாஷ்!
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் “இட்லி கடை படத்தின் 40 நிமிடக் காட்சிகளைப் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்துள்ளது. உணர்ச்சிப்பூர்வமாக படங்கள் தருவதில் தனுஷ் முக்கியமானவர். திருச்சிற்றம்பலம் படம் போது இட்லிகடை சிறப்பாக வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.