திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (11:14 IST)

தனுஷின் குபேரா டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது. மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் சில காட்சிகளை மட்டும் சமீபத்தில் ரி ஷூட் செய்தனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.