வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (08:56 IST)

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு…!

இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில அடுத்தடுத்து நடித்தார் தனுஷ். அதன் பிறகு காணாமல் போன மித்ரன் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இயக்கிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு மித்ரன் அடுத்து நடிகர் மாதவன் இயக்கும் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக ஜெயமோகன் கதை வசனம் எழுதியுள்ளார். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு ‘அதிஷ்டசாலி’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.