1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:18 IST)

உங்க மேல எந்த புகார் வந்தாலும் கண்டுக்கவே மாட்டோம்… விஜய் சேதுபதி பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன்!

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த எந்த படங்களும் ஓடவில்லை. ஆனால் அவர் வில்லனாக நடித்தால் அந்த படங்களுக்கு நல்ல வரவேற்புக் க்டைத்து வந்தது. இந்நிலையில் இந்த விமர்சனங்களைப் போக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அவரின் ஐம்பதாவது படமான ‘மகாராஜா’ பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதையடுத்து அவர் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளார். இப்போது பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலக, இப்போது அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அதிகளவில் மற்ற படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் பாராட்டி பேசியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில் “விஜய் சேதுபதி சார், நீங்க வாரத்துல ரெண்டு ஆடியோ ரிலீஸ் பன்ஷன்ல கலந்துக்குங்க. உங்க மேல தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து எந்த புகார் வந்தாலும் நாங்க கண்டுக்க மாட்டோம்” எனப் பேசியுளார். பல நடிகர்கள் தங்கள் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கே வர மறுக்கும் நிலையில் விஜய் சேதுபதி மற்ற படங்களின் ப்ரமோஷன்களில் கூட கலந்து கொள்வதைப் பாராட்டி இப்படி பேசியுள்ளார் தனஞ்செயன்.