வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (18:46 IST)

இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் தமிழ் புரமோ வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் விஜய் சேதுபதி பொதுமக்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து கேட்பதும் பொதுமக்கள் அவருக்கு அறிவுரை கூறும் காட்சிகளும் உள்ளன.

குறிப்பாக டாமினேட் செய்யும் போட்டியாளர்களை சும்மா ஓட விடனும் என்றும் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று பகுத்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தப்பாக விளையாடும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் இளகிய மனசுடன் இந்த போட்டியை நடத்தக்கூடாது என்றும் மிளகாய் பஜ்ஜி மாறி சும்மா சுருக்குன்னு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வீக் எண்டுல பம்முவாங்க வீக்டேஸ்ல எகிறுவாங்க, அந்த மாதிரியான போட்டியாளர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறும் காட்சி ப்ரோமோ வீடியோவில் உள்ளன.

கடைசியாக இந்த சீசனில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதி கூறுவதுடன் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Edited by Mahendran