1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (13:23 IST)

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. பெரியாருக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்.. சில நிமிட இடைவெளியில் ட்விட்..!

Rajini Kamal
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்து ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
 
இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்த நாள்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தந்தை பெரியாருக்கு வாழ்த்து கூறி ட்வீட் பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
"சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார்.
 
முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்த நாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்."
 
இந்த நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் உடல் நலம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்," என ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
Edited by Mahendran