ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:26 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு சீசனில் இடையில் அவர் வெளியேறிய நிலையில் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் எட்டாவது சீசனில் இருந்து கமல்ஹாசன் தன்னுடைய சினிமா பணிகள் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த சீசனின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோஷன் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

15 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க விஜய் சேதுபதிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு அவருக்கு சம்பளமாக 4 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளமாகக் கிடைக்கும். ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கே அவருக்கு அவ்வளவு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.