திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (18:01 IST)

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பும் நேரம் மாற்றம்.. மணிமேகலை வெளியேற்றம் காரணமா?

cooku1
குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரைம் டைமான 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது திடீரென ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிர் கிழமைகளில் இரவு 9:00 மணி முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது திடீரென சனிக்கிழமை 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளரான மணிமேகலை வெளியேறி விட்டதால் பலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்த்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நேரமாற்றம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த நிகழ்ச்சி நேரம் மாற்றம் செய்யப்பட்டதற்கான விளக்கம் எதுவும் விஜய் டிவி அளிக்கவில்லை.
 
Edited by Mahendran