வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (17:07 IST)

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை.....

ria vishwanadhan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியலில் இருந்து நடிகை ரியா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. இதில், ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி-2.

இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ரியா விஸ்வநாதன். இவர் கடந்த வாரம் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல்கள் அவரிடம் சீரியலில் இருந்து விலகியது குறித்து பேட்டி எடுத்தனர்.

இதற்கு விளக்கமளித்த ரியா,  ''சீரியலுக்கான ஷூட்டிங் இரவு பகலாக நடந்தது. தொடர்ந்து நடிக்க வேண்டியதாக இருந்ததால், குடும்பத்துடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை; என்னையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதனால், உடல் நிலையைப் பார்க்க முடியவில்லை. இதனால், உடல் எடை கூடியது. இது போன்ற காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''சீரியலில் இருந்து விலகுவதாக சேனலில் கூறியபோது, அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.