வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:41 IST)

'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

manimegalai
'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மணிமேகலை கோமாளியாக இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்று வருகிறார். அவரது காமெடி மற்றும் நடுவர்களை கூட கலாய்க்கும் தைரியம் ரசிகர்களை ரசிக்க வைத்தது என்பதும் மணிமேகலையின் திறமையை அனைவரும் போற்றி பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடு கலந்து கொண்ட மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் எனது கடைசி நிகழ்ச்சி என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதுவரை தனது ஆதரவாளித்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றி என்றும் இனிமேல் தான் எடுக்க போக முடிவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை என்பதால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தற்போது மணிமேகலையும் வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran