1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:18 IST)

மணிமகேலை நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான் - குட் நியூஸ் சொன்ன உசைன்!

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். 
 
சின்ன பிரபலம் மணிமகேலை கலகலப்பான காமெடியால் அனைவரையும் கவர்ந்தார். இவர் இதற்கு சன் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 
 
இந்த நிலையில் நேற்றைய எபிசோடு கலந்து கொண்ட மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் எனது கடைசி நிகழ்ச்சி என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். 
 
இதற்கான காரணம் மணிமேகலை தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். அதனால் தான் ஓய்வெடுக்க வெளியேறியுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது. மணிமேகலைக்கு சர்ப்ரைஸ் செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்க உசைன் சென்னையில் புதிய வீடு ஒன்றையும் வாங்கவுள்ளாராம். இந்த குட் நியூஸ் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.