1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (10:17 IST)

வாத்தி படத்தில் இருந்து முக்கியக் கலைஞர் விலகல்!

வாத்தி படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவைச் சேர்ந்த தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

தனுஷ் நடிக்கவிருக்கும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டது என்ற என்பதை பார்த்தோம், இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை ஆந்திராவில் நடந்துள்ளது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவைச் சேர்ந்த தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் இப்போது எதிர்பாராத காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தனுஷின் நானே வருவேன் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் யாமினி விலகியதும் குறிப்பிடத்தக்கது.