செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (15:39 IST)

புஷ்பா பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்!

ஆஸி அணியின் டேவிட் வார்னர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு அல்லு அர்ஜுன் போலவே ஆட்டம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தவர். இந்தியா மீது தனிப்பிரியம் கொண்ட இவர் சென்னை வெள்ளத்தின்போது அதுகுறித்து நலம் விசாரித்து பதிவிட்டிருந்தார். டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தே இந்திய மொழி பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வீடியோ போட்டு வந்தார் வார்னர்.

அவரின் வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடித்ததை அடுத்து தொடர்ந்து அதுபோல பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தைய ஹிட்டான புஷ்பா படத்தின் பாடலுக்கு அல்லு அர்ஜுன் போலவே நடனமாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.