புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (21:09 IST)

சேர்த்து வைக்க அழைத்த ரஜினி - அசிங்கப்படுத்திய தனுஷ்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமாக நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
இந்நிலையில் திடீரென பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக நேற்று முன் தினம் அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு இணையத்தில் புது காரணங்கள் வெளியாக இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 
 
இவர்கள் இன்னும் முறையாக விவாகரத்து செய்யவில்லை. சண்டை காரணமாக இருவரும் பிரிந்திருப்பதாக தனுஷ் அப்பா தெரிவித்தார். இந்நிலையில் இருவரும் சேர்த்து வைக்க தனுஷை பேச அழைத்தாராம் ரஜினி . ஆனால், தனுஷோ முடியாது என கூறி மறுத்து சூப்பர்ஸ்டார் மீது அதிகம் மரியாதை வைத்திருக்கும் நான் தவறாக எதுவும் பேசிவிடக்கூடாது என அந்த சந்திப்பை மறுத்துவிட்டாராம்.