செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (22:58 IST)

8 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது ...தனுஷுக்கு வேண்டுகோள் வைத்த நடிகை

சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ்  மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களது 18 வருட திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டனர்.

இதுகுறித்து நடிகை ஆரதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 18 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.