1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (08:06 IST)

கேப்டன் மில்லர் ஷூட்டிங் காட்சிகள் இணையத்தில் கசிவு…படக்குழு அதிர்ச்சி!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது தென்காசிக்கு அருகே மிகப்பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் காட்சிகளைப் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். இந்த காட்சிகளில் சிலவற்றை யாரோ ஒரு நபர் மொபைல் போனில் எடுத்து அதை இணையத்தில் கசியவிட்டுள்ளார். இதையடுத்து படக்குழுவினர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க உடனடியாக வேலைகளை செய்து வருகின்றனர்.