துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.
இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த படம் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியுள்ளது. ஆனாலும் சமீபத்தில் மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகியும் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். அதனால் இப்போது துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி மே 8 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வீர தீர சூரன் படத்தின் ப்ரமோஷனுக்காக சேலம் சென்ற விக்ரம்மிடம் ரசிகர் ஒருவர் “துருவ நட்சத்திரம்” படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டார். அதற்கு விக்ரம் “கௌதம் மேனனிடம் கேட்டு சொல்கிறேன்” என்று கூறினார். ரசிகர்கள் நாங்கள் நீண்டகாலமாக அந்த படத்துக்காகக் காத்திருப்பதாக சொல்ல “நானும்தான் காத்திருக்கிறேன்” என்ற பதிலை விக்ரம் கொடுத்துள்ளார்.