உன்ன சந்திச்சதில் மகிழ்ச்சி… நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட பாரதிராஜா!
தமிழ் சினிமாவின் பெருமை மிகு இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா கடைசியாக மீண்டும் முதல் மரியாதை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடித்து, இயக்கத்துக்கு ஒரு இடைவெளி விட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அவர் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு தாய்மெய் என்ற படத்தை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய்ள்ளது.. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் அந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாரதிராஜா சக இயக்குனரான மணிரத்னத்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை ட்விட்டரில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பின் காரணம் பற்றி, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.