1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (16:20 IST)

சூரியுடன் இணையும் தனுஷ் & சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரைசெந்தில்குமார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச் சட்டை திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பிறகு தனுஷை வைத்து கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் அவரின் அடுத்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் அவர் லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து படம் இயக்குவதாக இருந்து எதுவும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சூரியின் மேலாளர் தயாரிக்க உள்ளதாகவும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.