வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (11:47 IST)

மோகம் தலைக்கேறி காஜல் அகர்வாலை அடைய பல லட்சத்தை இழந்த தொழிலதிபர்!

பிரபல தொழிலதிபர் ஒருவர் நடிகை காஜல் அகர்வாலை அடைய பல லட்சம் ரூபாயை கொட்டி கொடுத்து ஏமாறியுள்ளார். 


 
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழுகிலதிபரின் மகன் பிரதீப்.  இவருக்கு சொந்தமாக தியேட்டர், விடுதி, பள்ளி, கல்லூரி சூப்பர் மார்க்கெட், அடுக்குமாடி வீடுகள் என எக்கச்சக்கமான தொழில்களை செய்து ஒரு நாளைக்கே லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. இதனால் பதறிப்போன அவரது தந்தை போலீசில் புகார் கொடுக்க அதிரடி தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 
 
பின்னர் பிரதீப் கொல்கத்தாவில்  இருப்பதாய் கண்டறிந்து அவரை ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது, தனக்கு பிடித்த நடிகைகளை தான் விரும்பும் இடத்திற்கு அழைக்கலாம் என இணையத்தளத்தில் பார்த்த பிரதீப் அதற்கு காஜல் அகர்வாலின் புகைப்படத்தை கிளிக் செய்துள்ளார். 
 
பின்னர் பிரதீப்பின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறும், செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்காக முன் பணமாக ரூ.25 ஆயிரத்தை செலுத்திவிட்டு நடிகையின் வருகைக்காக காத்திருந்த பிரதீப்பிற்கு நடந்தது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். 
 
காஜல் அகர்வாலுடன் அவர் அரை நிர்வாண புகைப்படத்தில் இருப்பது போன்று மார்பிங் செய்து பிரதீப் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்து அவரை மிரட்டி மீண்டும் மீண்டும் பணம் கரக்க ஆரம்பித்த மர்ம நபர் மொத்தம் ரூ.75 லட்சம் ஏமாற்றி கறந்துள்ளனர். இதனால் அவரது மனநிலை எங்கேயாவது ஓடி போகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட அவர் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். 


 


                                                      கைது செய்யப்பட்ட சரவணக்குமார்
இதனையடுத்து அந்த மர்ம நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், வங்கி கணக்கு முகவரியை அலசி ஆராய்ந்ததில் அந்த மர்ம நபர் தயாரிப்பாளர் சரவணக்குமார் என்பது தெரியவந்தது. இவர் சென்னை அசோக்நகர் பகுதியிலுள்ள லாட்ஜில் தங்கியிருந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து விசாரித்ததில் , பிரதீப்பை மிரட்டி அவரிடமிருந்து வாங்கிய பணத்தில் ரூ.65 லட்சத்தை உலககோப்பை கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் செலவு செய்ததாக கூறினார். பின்னர் அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து, சரவணக்குமார் மீது பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.