1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:23 IST)

'தளபதி 69’ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Vijay Movie
நடிகர் விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் 'தளபதி 69’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 69’. இந்த படத்தின் பூஜை அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன் ’தளபதி 69’ படத்தில் நடிக்கும் ஐந்து முக்கிய நட்சத்திரங்களின் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில், இன்று பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் பாபி தியோல், சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், தளபதி 69 படத்திலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva