வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:04 IST)

'கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய் ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை Netflix நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 3ஆம் தேதி, Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒரு புதிய திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம், நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திரையரங்குகளைப் போலவே ஓடிடியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து Netflix தனது சமூக வலைதளத்தில், அக்டோபர் 3ஆம் தேதி சிங்கம் கிளம்பி வருகிறது என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran