திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:46 IST)

தவெக கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி.. தேர்தல் ஆணையம் கூறிய பதில்..!

Vijay Flag
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று பதில் அளித்துள்ளது, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சில வாரங்களுக்கு முன், கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். ஆனால், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு, பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியது.

இந்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், கட்சி கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை.

பிற கட்சிகளின் சின்னங்கள் அல்லது பெயர்கள் பிரதிபலிக்காமல் கொடிகள் இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Siva