தனுஷ் - அனிருத் இணைய என்ன செய்தார் ரஜினி?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட. இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே மரண மாஸ் மற்றும் உல்லாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்களும், 5 தீம் இசையும் இடம்பெற்றுள்ளனவாம்.
3 பாடல்களை விவேக்கும், மீதமுள்ள 3 பாடல்களை தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், கு.கார்த்திக் ஆகியோரும் எழுதியுள்ளனர். அனிருத்துக்கும் தனுஷுக்கும் மனகசப்பு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில், அனிருத் இசையில் தனுஷ் ஒரு பாடலை அதுவும் ரஜினி படத்தில் எழுதியிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.