வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 3 டிசம்பர் 2025 (16:04 IST)

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்துள்ளது.  20 போட்டியாளர்களில் 9 பேர் வெளியேறியுள்ள நிலையில், சென்ற வாரம் வெளியேற்றம் இல்லை.
 
இந்த நிலையில், வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதிரை மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வெளியே இருந்து நிகழ்ச்சியை பார்த்து வந்த ஆதிரையின் மறுபிரவேசம், ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று வெளியான மூன்றாவது புரொமோவில், போட்டியாளர்களான பார்வதி, ரம்யா மற்றும் கம்ருதீன் ஆகியோருக்கு இடையே சண்டை மூள்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், "நான் சொல்லும்போது ஏன் யாரும் கேட்கல" என்று பார்வதி கேட்க, கம்ருதீன் அவருக்கு ஆதரவாக பேசுகிறார். 
 
இறுதியில், ரம்யா கண்ணீருடன் பார்வதியின் காலில் விழுந்து, "என்கிட்ட பேசாத, உன் கால்ல கூட விழுறேன்" என்று கூறுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva