7 வருடங்களுக்கு முன் இந்த நாளை மறக்க முடியாது! செளந்தர்யா ரஜினிகாந்த்

Last Updated: திங்கள், 28 மே 2018 (21:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் 'கோச்சடையான்' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மே 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு நிகழ்வு குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 2011ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி அப்பா ரஜினிகாந்த் அவர்களை சிங்கப்பூர் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கடவுளின் அருளாலும், உங்கள் அனைவரின் வேண்டுதலாலும் அவர் நல்ல நிலையில் உடல்நலம் பெற்று திரும்பி வந்தார். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Rajinikanth
இந்த நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அட்மிட் ஆன இதேதினத்தை குறிக்கும் வகையில் இன்று இரவு 7 மணிக்கு அவர் நடித்த 'காலா' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :