வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 20 மே 2018 (16:24 IST)

கர்நாடகாவில் கவர்னர் செய்தது தவறு: ரஜினிகாந்த் பேட்டி

கர்நாடகாவில் கவர்னர் செய்தது தவறு: ரஜினிகாந்த் பேட்டி
கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது சட்டப்படிதான் என்றாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது தவறு என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 
 
இன்று தனது போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், 'பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும் என்றும் தனது ரஜினி மக்கள் மன்றத்திலும், தான் ஆரம்பிக்க இருக்கும் கட்சியிலும் பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவேன் என்றும் ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

மேலும் தனக்கு 150 தொகுதிகளில் ஆதரவு இருப்பதாக உளவுத்துறை அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் உண்மையாக இருந்தால் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிய ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் வந்தால் அதனை சந்திப்பது குறித்து ஆலோசனை செய்வோம் என்று கூறினார்.