வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (16:47 IST)

ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம்: அமைச்சர் ஜெயக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வப்போது அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து கொண்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அமைச்சர் ஜெயகுமார், ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், எந்த ஒரு கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறினார். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ரஜினிகாந்துக்கு எப்போதுமே காலம் கடந்த ஞானோதயம் தான் ஏற்படும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே கட்சி அகில இந்த அளவில் அதிமுக தான்
 
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு 33% சதவிகித ஒதுக்கீடு, மகளிர் காவல் நிலையம், மகளிர் நீதிமன்றம், சட்டமன்றத்தில், உள்ளாட்சி அமைப்பில் மகளிர்களுக்கு அதிக ஒதுக்கீடு என்று கொடுத்தவர். அவ்வாறு இருக்கும்போது ரஜினிகாந்த் தற்போது ஏதோ புதியதாக கூறுவது போல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசுகிறார்' என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.