1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (22:07 IST)

ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு! இணைந்து செயல்படுவார்களா?

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன் இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படட்டது.
 
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் கூட்டம் ஒன்றுக்கு கமல் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டு காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட ஆலோசனை செய்யவுள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நல்லக்கண்ணு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை நேரில் அழைத்த கமல்ஹாசன், ரஜினியை தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இரண்டு நாளில் தகவல் சொல்வதாக ரஜினி கூறியதாகவும் கமல் கூறியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக கூடும் இந்த கூட்டத்தில் ரஜினி பங்கேற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்