1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:59 IST)

மூன்றாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய பீஸ்ட் படக்குழு!

பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

ரஷ்யாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடந்தது. இந்நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.