செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (12:27 IST)

விஜய் வீட்டின் முன்பு குடும்பத்துடன் முன்னாள் நிர்வாகி! – போலீஸார் விசாரணை!

நடிகர் விஜய் வீட்டின் முன்னால் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளராக இருந்தவர் குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு தனது குடும்பத்தோடு இவர் சென்றுள்ளார்.

ஆனால் அவரை சந்திக்க விஜய் மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் திரும்ப செல்லாமல் குடும்பத்தோடு வெளியே காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேரடியாக அவரிடம் போலீஸார் விசாரித்தபோது சம்பள பாக்கி வந்ததாக தெரிவித்துள்ளார், பின்னர் போலீஸார் அவரை பேசி திரும்ப அனுப்பியுள்ளனர்.