ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:09 IST)

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக… பூமிகா ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது முதலில் விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தெதி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.