புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (09:56 IST)

துண்டு துண்டாக இணையத்தில் வெளியாகும் அண்ணாத்த காட்சிகள்!

அண்ணாத்த திரைப்படத்தின் சில காட்சிகள் இணையம் மற்றும் முகநூலில் துண்டுதுண்டாக வெளியாகி வருகின்றன.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் சிறப்புக்காட்சிகளைப் பார்த்துவிட்டு தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் சில காட்சிகள் துண்டுதுண்டாக இணையம் மற்றும் முகநூலில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரஜினி அலகு குத்திக்கொண்டு செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.