1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:23 IST)

ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை: ரஜினி ரசிகரின் அண்ணாத்த ஸ்பெஷல்!

ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை: ரஜினி ரசிகரின் அண்ணாத்த ஸ்பெஷல்!
ரஜினி ரசிகர் ஒருவர் தான் நடத்தி வரும் ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்து அசத்தியுள்ளார்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் சிறப்பு சலுகையாக திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்தார்
 
இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒரு ரூபாய் கொடுத்து தோசையை சாப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அண்ணாத்த படம் வெற்றியடையும் என்று கூறிவிட்டு சென்றனர் 
 
தீபாவளியன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அண்ணாத்த ஸ்பெஷலாக ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்து வருவதாக அந்த ரஜினி ரசிகர் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது