செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (09:38 IST)

ரசிகர்களுடன் அமர்ந்து ’’அண்ணாத்த’’ படம் பார்த்த தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம்  இன்று உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று ரசிகர்களுடன் அமர்ந்து ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்தார்.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அண்ணாத்த திரைப்படத்தில் தலைவரின்  எனர்ஜி பயங்கரமாக இருந்துச்சு…படம் மாஸாக இருக்குது எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினி, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், நயன் தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.