திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (21:28 IST)

அதிக தியேட்டர்களில் ’’அண்ணாத்த ’ படம் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம்  உலகம் முழுவதும்  அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினி, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், நயன் தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இந்நிலையில், இன்று அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இப்படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இப்படம் அமையும் எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அண்ணாத்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுவதால்  தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகவுள்ளது என்ற விவரத்தை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் மட்டும்  600 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகிறது. மேலும், மேலும் அண்ணாத்த படம் உலகம் முழுவதும் சுமார் 1190 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகவுள்ளது. 
 
மேலும், அண்ணாத்த தமிழ்ப் படம் அமெரிக்காவில் 416 தியேட்டர்களிலும், இப்படத்தின் தெலுங்கு டப்பிங் படமான பெத்தன்னா 261 தியேட்டர்களிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.