அரை ட்ராயர் அணிந்து காதலருடன் ஊர் சுற்றும் ஆல்யா மானஸா! வைரலாகும் புகைப்படம்!

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (19:01 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் நிஜ காதலர்களாக மாறிய ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் அடிக்கடி அவுட்டிங் சென்று புகைப்படங்களை சமூக வலைத்தளங்ககளில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 


 
அந்த வகையில் தற்போது மாலத்தீவுவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் ஆல்யா அரை ட்ராயர் அணிந்துகொண்டு காதலர் சஞ்சீவ்வுடன்  கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதனை கண்ட அவரது  ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போன்று நடித்துவிட்டு இப்படி நிஜ வாழ்க்கையில் மோசமாக நடந்து கொள்கிறீர்களே என திட்டி வருகின்றனர். 


 
ஆனால் ஒரு சிலரோ அவரது அழகை வர்ணித்து காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :