திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (08:50 IST)

’செம்பா’ ஆல்யா-மானஸ் இடையே காதல் முறிவு

ராஜாராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஆல்யா. இவரும் மானஸ் என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இது தொடர்பாக பிரபல வாரஇதழ் ஒன்றுக்கு மானஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
`` எனக்கும் ஆல்யாவுக்கும் இடையே அஞ்சாறு வருஷப் பழக்கம். மானாட மயிலாட' சமயத்துலயே அறிமுகமாகிட்டாங்க. அவங்கதான் லவ் ப்ரப்போஸ் பண்ணினாங்க. எனக்கும் பிடிச்சிருந்ததால நானும் ஓ.கே சொன்னேன். இந்த வருஷக் காதலர் தினத்து வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 

ஆனா அவங்க மனசுல என்ன மாற்றம் வந்தது தெரியல, திடீர்னு நமக்கிடையே செட் ஆகாதுன்னாங்க. நான் என்ன பதில் சொல்றது. ப்ரப்போஸ் செய்ததும் அவங்கதான், வேண்டாம்கிறதும் அவங்கதான். அதுக்கு மேல யார் என்ன பண்ண முடியும். 'நல்லா இரும்மா'ன்னு சொல்லிட்டு சினிமாவுல கான்சென்ட்ரேஷன் பண்ணத் தொடங்கிட்டேன்' என்கிறார் மானஸ்.