செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (22:26 IST)

பர்தா அணிந்து கள்ள ஓட்டு: முஸ்லீம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளர்!

இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிந்து வந்து வாக்களிப்பதாகவும், அவர்கள் முகத்தை பார்த்து யாரும் சோதனை செய்வதில்லை என்றும், அதனால் அவர்கள் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளர் ஒருவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 8 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முசாஃபர் நகர் என்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து ஓட்டு போட வந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
பர்தா அணிந்து வந்து ஓட்டு போடும் பெண்களின் முகத்தை யாரும் சோதனை செய்வதில்லை என்றும், இதனை சரிசெய்யாவிட்டால்  நான் மறுவாக்குபதிவு நடத்த வலியுறுத்துவேன்’’ என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
 
பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான் இந்த பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது