செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:18 IST)

விஷாலை அடுத்து விஜய் சகோதரருக்கு உதவி செய்யும் விஜய்சேதுபதி

தளபதி விஜய்யின் சகோதரர் விக்ராந்த் கடந்த 2005ஆம் ஆண்டு 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 15 படங்கள் நடித்துவிட்டார். இருப்பினும் அவர் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்த நிலையில் 'பாண்டியநாடு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் தந்து விக்ராந்த்துக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் விஷால்

இந்த நிலையில் விஷாலை அடுத்து தற்போது விஜய்சேதுபதி, விக்ராந்துக்கு கைகொடுத்துள்ளார். ஆம், விக்ராந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு விஜய்சேதுபதி திரைக்கதை வசனம் எழுத ஒப்புக்கொண்டுள்ளாராம். இதற்கு முன் 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு திரைக்கதை எழுதி அனுபவம் உள்ள விஜய்சேதுபதி, தற்போது முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். விஜய்சேதுபதி இருக்கும் பிசியில் அவர் திரைக்கதை எழுத ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் என இந்த படத்தின் இயக்குனரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

மேலும் விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு 2' மற்றும் சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.