திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (14:32 IST)

ராஜா ராணி புகழ் ஆல்யாவை பழிதீர்த்த சஞ்சீவ்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும்  ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் நிஜ காதலர்களாக மாறியுள்ளார்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ்.


 
சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறியுள்ளனர். அதன்படி சஞ்சீவ், சிறிய தவறு ஒன்றுக்காக ஆல்யா மானசாவை நடுரோட்டில் இறக்கிவிட்டு  மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன் என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.