அஜித்குமாரின் 62வது படம்.. இவர்தான் இயக்குனர் – வைரலாகும் போலி போஸ்டர்!
அஜித் குமாரின் 62வது படம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில் தற்போது திடீரென போலி போஸ்டர் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
அஜித்குமார் – எச்.வினோத் கூட்டணியில் சமீபத்தில் வலிமை படம் வெளியாகி வசூலை குவித்துள்ளது. இதையடுத்து அஜித்தின் 61வது படமும் எச்.வினோத் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை தொடர்ந்து அஜித்தின் 62வது படம் குறித்த ஊகங்களும் எழுந்துள்ளன.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது போன்ற போலியான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.