1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:46 IST)

மாஸ் ஹீரோக்களுக்கும் தங்கையாகும் நடிகை… எல்லாம் சிவகார்த்திகேயன் ராசிதான்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையாக முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாகவும் எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவராகவும் இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டெம்ப்ளேட் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் காக்கா முட்ட படத்தில் நடித்திருந்தார். அதைப் போலவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

ஆனால் என்ன ராசியோ தெரியவில்லை பல படங்களில் அவருக்கு இப்போது தங்கை வேடமே வந்து கொண்டு இருக்கிறதாம். தெலுங்கில் நானி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களில் தங்கை வேடங்களில் புக் ஆகியுள்ளார்.