செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:22 IST)

ஏற்கனவே தொழில் பாதிப்பு; 100 நாள் வேலை கிடையாது! – புலம்பும் கிராம முதியவர்கள்!

தமிழகத்தில் 100 நாள் வேலைகளில் 55 வயதிற்கு அதிகமானோரை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கிராமப்புற ஏழை மக்களுக்கு தற்காலிகமாக வேலை வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழான 100 நாள் வேலை கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டங்களில் 55 வயதிற்கு அதிகமாக உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் சிறு சிறு வியாபாரங்களை செய்து பிழைப்பு நடத்திய முதியவர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் 100 நாள் வேலை கைகொடுத்து வருகிறது. இதிலும் அவர்கள் நிராகரிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக பாதிப்படைவர் என்றும், அவர்களுக்கு உதவி தொகை வழங்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.